மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"களத்தில் இறங்கிய விஜய் சேதுபதி..." ஆலந்தூர் மக்களுக்கு இலவசமாக தக்காளி வழங்கிய விஜய் சேதுபதி ரசிகர் மன்றம்.!
தமிழ் சினிமா ரசிகர்களால் மக்கள் செல்வன் என்று அன்போடு அழைக்கப்படுபவர் விஜய் சேதுபதி. சமீபகாலமாக இவர் நடித்த திரைப்படங்கள் ஓரளவு வெற்றி பெறவில்லை என்றாலும் இவரது நடிப்பில் வெளியான ஹிந்தி வெப் சீரிஸ் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்களின் மீது கொண்டிருக்கும் அப்பழுக்கற்ற அன்பாலும் அனைத்து விதமான ரசிகர்களாலும் இவர் கொண்டாடப்பட்டு வருகிறார். தமிழ் சினிமாவிலேயே உணர்வுபூர்வமான ரசிகர்களை பெற்றிருப்பதில் விஜய் சேதுபதிக்கு முன்னிலை என்றால் அது மிகையாகாது.
கடந்த இரண்டு வாரங்களில் தக்காளியின் விலை விண்ணை முட்டி இருக்கிறது. இதன் காரணமாக ஏழை எளிய மக்கள் தக்காளி வாங்கி பயன்படுத்த தயங்கி வரும் ஒரு சூழல் உருவாகி இருக்கிறது. இந்த விலை ஏற்றத்தினை சுட்டிக்காட்டும் வகையிலும் மக்களுக்கு பயன்படும் படியும் விஜய் சேதுபதி ரசிகர்கள் ஒரு செயலை செய்து இருக்கின்றனர்.
அதன்படி விஜய் சேதுபதி ரசிகர் மன்றம் சார்பாக ஆலந்தூர் பகுதி மக்களுக்கு தக்காளி இலவசமாக வழங்கப்பட்டிருக்கிறது. இதுவரை இலவசமாக பிரியாணி அல்லது ஏதேனும் ஒரு பொருள்களை கொடுத்து வந்த நிலையில் மக்கள் செல்வனின் ரசிகர்கள் வித்தியாசமாக மக்களுக்கு தக்காளியை கொடுத்திருக்கின்றனர்.