#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கொரோனா லாக்டவுனில் கிராமத்தில் எளிமையாக நடந்த தமிழ் நடிகரின் திருமணம்! வைரலாகும் புகைப்படம்!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வந்தநிலையில், கொரோனா அச்சுறுத்தலால் ஏராளமான நிகழ்ச்சிகள் மிகவும் எளிமையாக நடைபெற்று வருகின்றன. மேலும் இத்தகைய ஊரடங்கில் பல நட்சத்திரங்களின் திருமணங்களும் சத்தமே இல்லாமல் அமைதியாக எளிமையாக நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் தமிழ் நடிகர் சத்யாவின் திருமணமும் நேற்று நடைபெற்றுள்ளது.
தமிழில் யமுனா என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் சத்யா. இவர் மெட்ரோ என்ற திரைப்படத்தில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். மேலும் மற்றொரு புதிய படத்திலும் நடித்துள்ளார். இப்படம் கொரோனா ஊரடங்கு முடிவடைந்த பின்பு திரைக்கு வர உள்ளது.
இந்த நிலையிலேயே நடிகர் சத்யாவுக்கும், மகாலட்சுமி என்பவருக்கும் நேற்று கரூர் அருகிலுள்ள புன்னம் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மணமக்களின் பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர் . இந்நிலையில் அவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.