திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ப்பா.. யாரடி நீ மோகினி சீரியல் வில்லியாக இது! தாவணி பாவாடையில் கொள்ளை அழகில் ரசிகர்களை கட்டியிழுக்கிறாரே!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி ஏராளமான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அவ்வாறு 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் யாரடி நீ மோகினி.
இந்தத் தொடரில் பயங்கர வில்லியாக நடித்து ரசிகர்கள் அனைவரையும் மிரள வைத்து வருபவர் நடிகை சைத்ரா ரெட்டி. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். ஆனாலும் சைத்ரா யாரடி நீ மோகினி தொடரில் நடித்த பிறகே ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
சமூக வலைதளங்களில் மிகவும் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது சற்று உடல் எடை மெலிந்து, தாவணி பாவாடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.