சூர்யா 45 படப்பிடிப்பு நிறுத்தம்; மக்கள் புகாரால் காவல்துறை அதிரடி.!
வாவ்.. மீண்டும் பழைய தோற்றத்திற்கு திரும்பிய யாஷிகா!! வைரல் புகைப்படம் இதோ..

விபத்தில் இருந்து மீண்ட நடிகை யாஷிகா ஆனந்தின் தற்போதைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகிவருகிறது.
மிக குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இவர் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு, தொடர்ந்து சினிமாவில் பிசியாக இருந்த யாஷிகா, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெரிய கார் விபத்து ஒன்றில் சிக்கினார். இந்த விபத்தில் யாஷிகாவின் நெருங்கிய தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார்.
எலும்பு முறிவுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த யாஷிகா சமீபத்தில்தான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் சமீபத்தில் கடை திறப்பு விழா ஒன்றில் பங்கேற்ற யாஷிகா பார்ப்பதற்கு மிகவும் குண்டாக, ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியிருந்தார்.
தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றில், தனது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய யாஷிகாவா திரும்பியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.