மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மது பாட்டிலுடன் நியூ இயரை கொண்டாடிய யாஷிகா ஆனந்த்.! வைரலாகும் வித்தியாசமான போட்டோ சூட்..
தமிழ் சினிமாவின் கவர்ச்சி கன்னியாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இவர் தமிழில் பல திரைப்படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.
தமிழில் முதலில் 2016 ஆம் வருடம் ஜீவா நடிப்பில் வெளியான 'கவலை வேண்டாம்' என்ற திரைப்படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.
இவர் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜோம்பி, கழுகு 2, நோட்டா போன்ற திரைப்படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தற்போது மேலும் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இவ்வாறு சினிமாவில் பிசியான நடிகையாக இருந்து வரும் யாஷிகா, அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்வார். கடந்த வருடம் தனது தோழியுடன் காரில் செல்லும்போது மிகப்பெரிய விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் கால் முறிந்த நிலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனை அடுத்து தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். தற்போது 2024 ஆம் ஆண்டு நியூ இயர் செலிப்ரேஷனில் போட்டோக்களை பதிந்துள்ளார். இப்புகைப்படத்தில் மது பாட்டிலுடன் வித்தியாசமாக போட்டோ ஷூட் செய்துள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.