மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
13வயதில் சந்தானம் படத்தில் நடிக்கும் போது நடந்த கொடுமை.! பதிலடி கொடுத்த யாஷிகா ஆனந்த்.?
2016ம் ஆண்டு "கவலை வேண்டாம்" என்ற தமிழ் படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இவர் பஞ்சாபை சேர்ந்த மாடல் அழகியாவார். இரண்டாவதாக தமிழில் இவர் நடித்த "துருவங்கள் பதினாறு" படத்தின் மூலம் கவனம் ஈர்த்தார்.
தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, கழுகு 2, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, பெஸ்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டார். அங்கிருந்து வந்த பிறகு ஒரு விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் 6 மாதங்கள் சிகிச்சை பெற்று குணடைந்த இவர், தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி வரும் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியளித்திருந்தார்.
இவ்வாறு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கவர்ச்சி கன்னியாக நடித்து வந்த யாஷிகா, சமீபத்தில் அளித்த பேட்டியில் சந்தானம் திரைப்படத்தில் நடித்த போது நடந்த பாலியல் அத்துமீறல்களை குறித்து பேசி அதிர்ச்சி அளித்துள்ளார்.
அதில் "நான் நடிகர் சந்தானத்துடன் "இனிமே இப்படித்தான்" என்ற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தேன். அப்போது எனக்கு 13 வயது தான். அந்த ஷூட்டிங்கில் ஒரு ஆள் என்னை தவறாக தொட்டான். உடனே நான் ஓங்கி உதைத்து விட்டேன். தைரியம் தான் பெண்ணுக்கு முக்கியம்" என்று கூறியுள்ளார்.