மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யாஷிகாவுக்கு கணவர் இப்படிதான் இருக்கணுமாம்.! அதிரடியாக போட்ட கண்டிஷன்! ஆடிப்போன ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் நடிகை யாஷிகா ஆனந்த். இதைத்தொடர்ந்து அவர் கவுதம் கார்த்தி நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார்.மேலும் பிக்பாஸ் வீட்டில் அவர் நடிகர் மகத்துடன் காதல் போன்ற பல சர்ச்சைகளில் சிக்கினார்.
அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய யாஷிகா அடுத்தடுத்த படங்களில் பிஸியாகநடித்துவருகிறார். இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் ஆண் நண்பர்களுடன் வெளியே சுற்றுவது போன்ற புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் அவர் தற்போது தனது வருங்கால கணவர் குறித்து பேசியுள்ளார்.அப்பொழுது யாஷிகா, நான் இப்போதைக்கு ஒரு ஹேப்பி சிங்கிள் கேர்ள், எனது வருங்கால கணவர் ஜென்ட்டில்மேனாக இருக்க வேண்டும். அவர் என்னை நிறைய காதலிக்க வேண்டும்.
மேலும் அவர் நகைச்சுவை உணர்வு மிக்கவராகவும், ரொமான்டிக் நபராகவும் இருக்கவேண்டும். அதுமட்டுமின்றி கூடவே சாகச விரும்பியாகவும், கொஞ்சம் திமிர் பிடித்தவராகவும் இருக்க வேண்டும். அத்துடன் அவருக்கு பாடவும், நடனமாடவும் நன்றாக சமைக்கவும் தெரிந்திருக்க வேண்டும். எல்லாத்தையும் விட முக்கியமாக அவர் தாடி வைத்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.