மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கவர்ச்சி கன்னி யாஷிகா ஹீரோயினாக நடிக்கும் திரைப்படம்.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாகவும், கவர்ச்சி கன்னியாகவும் அறியப்படுபவர் யாஷிகா ஆனந்த். இவர் தமிழில் முதன் முதலில் 'கவலை வேண்டாம்' எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இப்படம் பெரிதும் பேசப்படவில்லை.
இப்படத்திற்கு பின்பு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அப்படங்கள் வெற்றி பெறவில்லை. இதனை அடுத்து விஜய் தொலைக்காட்சியை ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்த யாஷிகா, இதில் இருந்து வெளிவந்த பின்பு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். தற்போது 'சைத்ரா' எனும் திரில்லர் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் 17ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டு வருகிறது.
மேலும் அறிமுக இயக்குனர் ஜெனித் குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் பீட்சா, டிமான்டி காலனி போன்ற திரைப்படங்களைப் போல் வித்யாசமான கதைகளை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் யாஷிகா முதன் முதலில் கதாநாயகியாக நடிக்கும் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது.