மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜொலி ஜொலிக்கும் உடையில் ரசிகர்களின் மனதை கவர்ந்த யாசிகா.. தீயாய் பரவும் புகைப்படம்.!
பஞ்சாபை சேர்ந்த மாடல் அழகி யாஷிகா ஆனந்த். இவர் திரைப்பட நடிகையாகவும் உள்ளார். 2016ம் ஆண்டு "கவலை வேண்டாம்" என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டுக்குத்து, நோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதையடுத்து 2018ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "பிக் பாஸ் சீசன் 2" நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர், "ஜோடி நம்பர் 1 சீசன் 10" நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
கடைசியாக 2022ஆம் ஆண்டு "பெஸ்டி" என்ற திரைப்படத்தில் யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். தற்போது மேலும் சில படங்களில் நடித்து வரும் யாஷிகா ஆனந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைவரையும் கவர்ந்துள்ளன. குட்டியான ஜிகு ஜிகுவென ஜொலிக்கும் அழகான உடையில் அவர் பதிவேற்றியிருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.