திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"ஹிந்தி வேண்டாம் தாய்மொழி போதும்" ஜவான் மேடையில் யோகிபாபுவின் அதிரவைக்கும் பேச்சு .!
அட்லீ இயக்கியிருக்கும் "ஜவான்" படம், விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மிக பிரம்மாண்டமாக சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
அதில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, ப்ரியாமணி, யோகி பாபு, இயக்குனர் அட்லீ, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சித் தொகுப்பாளர் பாவனா இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
அப்போது யோகி பாபு மேடைக்கு பேச வந்த போது, பாவனா அவருடன் ஹிந்தியில் பேசினார். அப்போது யோகி பாபு," நான் முதலில் என் தாய் மொழியில் பேசிக் கொள்கிறேன்" என்று கூறினார்.
மேலும், "தெறி படத்தில் தளபதியுடன் நான் நடித்த காட்சிகளை எடிட்டர் ரூபன் தூக்கத்தில் தூக்கி விட்டார். விஜய் சேதுபதி சாருடன் எனக்கு நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது" என்றும் கூறினார், யோகி பாபு.