மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணம் முடிந்த கையோடு தன் மனைவியை அழைத்துக்கொண்டு யோகிபாபு எங்கே போனாராம் தெரியுமா?
யாமிருக்க பயமேன் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலாமானார் யோகிபாபு. இந்த படத்தில் இவர் நடித்த பண்ணி மூஞ்சி வாயன் என்ற காதாபாத்திரம் இன்று இவரை தமிழ் சினிமாவில் பிரபல காமெடியனாக மாற்றியுள்ளது. விஜய், ரஜினி என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் முன்னணி காமெடியனாக நடித்துவருகிறார் யோகி பாபு.
யோகி பாபு படங்களில் நடிக்க ஒரு நாளைக்கு 5 லட்சம் சம்பளம் வாங்குவதாகவும், தற்போது அவரது கைவசம் 19 படங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபாத்தில் யாருக்கும் சொல்லாமல் பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார் யோகி பாபு.
திருமண வரவேற்பு வரும் மார்ச் மாதம் நடைபெறும் எனவும் அவர் அறிவித்திருந்தார். தீவிர முருக பக்தரான யோகி பாபு தனது திருமணம் முடிந்த கையோடு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குத்தான் சென்றாராம். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.