#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நயன்தாராவை அடுத்து பிரபல நடிகையுடன் யோகி பாபு! என்ன படம் தெரியுமா?
தமிழ் சினிமாவில் யாமிருக்க பயமேன் திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் யோகி பாபு. இதில் இவர் நடித்திருந்த பண்ணி மூஞ்சி வாயன் கதாபாத்திரம் மாபெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது. அதன்மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குவிய தொடங்கின.
மாதம் 10 படங்கள் வெளிவந்தால் அதில் குறைந்தது 8 படங்களிலாவது யோகிபாபு நடித்துள்ளார். தற்போது 17 படங்களுக்கு மேல் கையில் வைத்திருக்கும் யோகி பாபு விஜய் 63 படத்திலும் நடித்து வருகிறார். அது போக தர்ம ராஜா, குர்கா ,ஜாம்பி போன்ற பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இயக்குனர் AL விஜய் இயக்கத்தில், GV பிரகாஷ் நடித்துவரும் வாட்ச்மேன் படத்திற்கு விளம்பரப்பாடல் ஒன்றிற்கு பிரபல நடிகை சாயிஷாவுடன் குத்தாட்டம் போட்டுள்ளார் யோகி பாபு. இதற்குமுன்பு கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுடன் இணைந்து யோகிபாபு நடித்தது குறிப்பிடத்தக்கது.