மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"யூடியூப் தளத்தில் பிரபல நடிகரை பற்றி அவதூறு!" "பிரபல யூடியூபரைக் கைது செய்த போலீசார்!"
2011ம் ஆண்டு ரவி பாபு இயக்கிய "நுவ்விலா" என்ற காதல் நகைச்சுவை திரைப்படத்தில் அறிமுகமானார் விஜய் தேவரகொண்டா. ஆனால் 2016ம் ஆண்டு "பெல்லி சுப்புலு" என்ற பிளாக் பஸ்டர் படத்தில் நடித்ததின் மூலம் தெலுங்கின் முன்னணி நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
2017ல் அர்ஜுன் ரெட்டி, 2018ல் கீதா கோவிந்தம் ஆகிய படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தன. கீதா கோவிந்தம் படத்தில் இவருக்கு ராஷ்மிகாவுடன் காதல் கெமிஸ்ட்ரி அருமையாக இருந்தது. இதையடுத்து "சாம்ராட்" படத்திலும் இருவரும் இணைந்து நடித்தனர்.
இதையடுத்து ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாகவும், டேட்டிங்கில் இருப்பதாகவும் ஆதாரத்தை ரசிகர்கள் வெளியிட்டாலும் இருவரும் இதுவரை எந்த பதிலும் கூறவில்லை. சமீபத்தில் விஜய் தேவரகொண்டா சமந்தாவுடன் "குஷி" படத்தில் நடித்திருந்தார்.
இதையடுத்து தற்போது வெங்கட் கிரண் என்ற நபர் தனது யூடியூப் சேனலில் விஜய் தேவரகொண்டாவையும், அவருடன் நடித்த நடிகையையும் படுமோசமாக பேசியுள்ளார். இதையடுத்து விஜய் தேவரகொண்டா சைபர் க்ரைம் போலீசில் புகாரளித்த சில மணிநேரத்திலேயே சம்மந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.