மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னை உங்களால் அவமானப்படுத்த இயலாது.! ஸ்ருதிஹாசன் நச் பதில்.!
கே ஜி எஃப் திரைப்படத்திற்கு பின்னர் நீல் பிரசாந்த் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் சலார். இந்த திரைப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், ஜெகபதிபாபு, பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படம் வரும் 22-ஆம் தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் தொடர்பாக ஸ்ருதிஹாசன் வழங்கிய பேட்டியில், நான் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்தேன் என்றும், அதேபோல பார்ட்டியில் நிதானமாக இருக்க மாட்டேன் எனவும், நண்பர்களோடு குடிப்பதை நான் வழக்கமாக கொண்டிருந்தேன் என்றும் தெரிவித்திருந்தார். ஆனாலும் தற்போது அதிலிருந்து மீண்டு வந்து விட்டேன் என்று தெரிவித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
இது குறித்து சமூக வலைதளவாசிகள் பலர் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தனர். இதனையடுத்து சுருதிஹாசன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர்,'எனது நிதானம் பற்றி பேசும் கட்டுரைகளால் என்னை அவமானப்படுத்த முயற்சிப்பது பலன் அளிக்காது. கடவுள் கனிவானவர். வாழ்க்கை நன்றாக இருக்கிறது' என்று பதிலளித்துள்ளார்.