மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடு இரவில் என் ரூம் கதவை தட்டி, மீ டூவில் சிக்கிய பிரபல நடிகரின் தந்தை, இளம்பெண்ணின் பகீர் குற்றசாட்டு.!
சமீப காலமாக நடிகைகள் மற்றும் சராசரி பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை தைரியமாக #metoo என்ற ஹாஸ்டேக் மூலம் வெளியிட்டு வருகின்றனர்.இதனை பாடகி சின்மயி ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் திரையுலகமே மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் கவிஞர் வைரமுத்து மீது சின்மயி பாலியல் குற்றசாட்டை வைத்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று நடிகர் அர்ஜூன் மீது அவர் உடன் நடித்த நடிகை பாலியல் குற்றச்சாட்டினை சுமத்தினார்.இதைத்தொடர்ந்து அந்த வரிசையில் நடிகரும், இயக்குனருமான நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் மீது புகார் எழுந்துள்ளது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கதை வசனத்தில் நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவான படம் பொன்னர் - சங்கர். அந்த படப்பிடிப்பின்போது தியாகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக அந்த படத்துக்கு போட்டோ கிராபராக பணியாற்றிய இளம் பெண் பிரித்திகா மேனன் என்பவர் மீ டூ ஹேஷ்டேக்கில் குற்றச்சாட்டை பதிவிட்டுள்ளார்.
அதில், இயக்குனர் தியாகராஜன் படப்பிடிப்பில் இளம்பெண்கள் தமக்கு தாய்மசாஜ் செய்ததாக கூறி அதன் புகைப்படங்களை தன்னிடம் காட்டியதாகவும், அந்த பெண்களுடன் தான் உல்லாசமாக இருந்ததாக சொன்னதாகவும் பிரித்திகா மேனன் தெரிவித்துள்ளார்.
மேலும் என்னிடம் மிகவும் ஆபாசமாக பேசுவார், உன்னை அடுத்த ஐஸ்வர்யா ராய் ஆக்குகிறேன் என்னுடன் வா என கூறுவார். நான் மறுத்துவிட்டேன்.
இவ்வாறு ஒருநாள் தனக்கு உடம்பு சரியில்லாமல் போனபோது, என் ரூமுக்கு வா, பிராந்த தருகிறேன் என்று தியாகராஜன் சொன்னதும், பயந்து தன் அறைக்கு ஓடிப்போய் கதவை சாத்தி கொண்டதாகவும், இரவு முழுவதும் தூங்காமல் பயத்துடன் இருந்ததாகவும் பிரித்திகா மேனன் பதிவிட்டுள்ளார்.