வெளிநாட்டிலிருந்து ஆசை ஆசையாக வந்த மகன்! சில நாட்களிலேயே பெற்றோருக்கு காத்திருந்த பேரிடி! பகீர் சம்பவம்!!



youngman-dead-after-coming-from-abroad

சென்னை மேற்கு மாம்பலம் சாமிநாதன் தெருவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ரமேஷ். இவருக்கு மணிஷ் என்ற மகன் உள்ளார். 25 வயது நிறைந்த அவர் ஸ்வீடன் நாட்டில் பிஎச்டி படிப்பை முடித்துவிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்புதான் சென்னை வந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை திடீரென மணிஷுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன அவரது குடும்பத்தார்கள் அவரை வடபழனி நூறடி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு இடவசதி இல்லை என கூறிய நிலையில், அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

dead

அங்கு மணிஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட அவரது பெற்றோர்கள் கதறித் துடித்துள்ளனர். அண்மையில்தான் மணிஷின் பெற்றோர்கள் ரமேஷ் மற்றும் அவரது மனைவி இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்திக் கொண்டு மீண்டு வந்துள்ளனர். இந்நிலையில் மணிஷுக்கும் கொரோனோ தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் பிரேத பரிசோதனைக்கு பின்னர்தான் உண்மை தெரியவரும். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.