மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யுவனின் பாட்டை கேட்க மாணவிகளை ஏறிமிதித்த பயங்கரம்.. 6 பேரின் உயிர் ஊசல்..!
பிரபல முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. இவரது பாடல்கள் அனைவரையும் கவரும் விதமாக இருக்கும். சிலர் இவரது பாடலை மயிலிறகுடன் ஒப்பிட்டு கூறுவர். இதற்கு காரணம் மயிலிறகை வைத்து வருடும்போது எப்படி தூக்கம் வருமோ? அதுபோல யுவன் சங்கர்ராஜாவின் பாட்டு கேட்கும் போதும் தூக்கம் வரும் என்பர்.
இந்நிலையில், கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி துடியலூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியின் 25-வது ஆண்டு விழாவையொட்டி, யுவன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவரது இசையை கேட்க ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால், கீழே விழுந்து கூட்டத்தில் சிக்கினர்.
அவர்களை ஏறி மிதித்து பலர் சென்ற நிலையில், பெண் உதவியாளர், 4 மாணவிகள் உட்பட 6 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.