மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அம்மா அங்க போயிருக்கவே கூடாது.. பேரையே கெடுத்துட்டாங்க!! பிரபல நிகழ்ச்சியை வெளுத்து வாங்கிய அர்ச்சனா மகள்!!
சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளினிகளுள் ஒருவராக இருப்பவர் அர்ச்சனா. சன் டிவியின் மூலம் ஆங்கராக களமிறங்கிய அவர் ஏராளமான ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார். பின் சில காலம் இடைவெளி விட்டிருந்த அவர் மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
பின் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே ரீச்சானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரது சில செயல்களால் விமர்சனத்திற்கும் ஆளானார். அதனை தொடர்ந்து அர்ச்சனா என்ன செய்தாலும் நெட்டிசன்கள் மோசமாக விமர்சனம் செய்யத் துவங்கினர். மேலும் அவருக்கு ஆதரவாக பேசிய அர்ச்சனாவின் மகள் சாராவையும் விமர்சித்தனர்.
ஆனாலும் சாரா அனைத்தையும் பக்குவமாக கையாண்டார். விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அர்ச்சனா தற்போது மகள் சாராவுடன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர் மாம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்தநிலையில் அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் சாராவிடம் அம்மாவிடம் பிடித்தது மற்றும் பிடிக்காதது குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அம்மா பேட்டி எடுத்தது மிகவும் பிடித்தது. அம்மா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பிடிக்காதது. என் அம்மாவை பற்றி எனக்கு நன்கு தெரியும். அவரது கேரக்டரை முழுமையாக காட்டாமல் கொஞ்ச நேரத்தில் சுருக்கி நெகட்டிவாக காட்டி அவரது பெயரே கெட்டுப் போய்விட்டது. இதனால் சோசியல் மீடியாவில் நிறைய எதிர்ப்புகளை சந்தித்தார் எனக் கூறியுள்ளார்.