53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
முதலில் மெர்சல் படத்தில் விஜய்க்கு மகனாக நடிக்க இருந்தது இந்த பிரபலம்தானாம்! ஆனால்?
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் மெர்சல். வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்தது மெர்சல் திரைப்படம். படம் வெளியான சில நாட்களில் ஏற்பட்ட சர்ச்சைகளே படத்தின் வெற்றிக்கு பாதி காரணம் என கூறலாம்.
சிறந்த சர்வதேச நடிகருக்கான விருதினை நடிகர் விஜய்க்கு பெற்றுத்தந்தது மெர்சல் திரைப்படம். மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது மீண்டும் இயக்குனர் அட்லீயுடன் கூட்டணி சேர்ந்து தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.
இந்நிலையில் மெர்சல் படம் குறித்து செய்தி ஓன்று வெளியாகியுள்ளது. அதாவது, மெர்சல் படத்தில் பிளாஷ் பேக் காட்சியில் விஜய் நடித்திருப்பார். அந்த காட்சிகளில் விஜய்க்கு மகனாக ஒரு சிறுவன் நடித்திருப்பான். அந்த சிறுவனின் நடிப்பும் சிறப்பாக இருக்கும்.
முதலில் அந்த சிறுவன் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது ஜீ தமிழ் லிட்டில் சூப்பர் ஸ்டார் புகழ் அஸ்வந்த் தானாம். ஆனால், அந்த நேரம் லிட்டில் சூப்பர் ஸ்டார் இறுதி கட்டம் நடைபெற்றதால் மேசன் படத்தில் நடிக்கமுடியவில்லை, கண்டிப்பாக விஜய் படத்தில் நடிப்பேன் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார் அஸ்வந்த்.