ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
"என் அம்மா முன்னாடியே என்னிடம் அந்த மாதிரி பண்ணாங்க" ஜீ தமிழ் நடிகையின் கண்ணீர் பேட்டி..
வெள்ளித்திரையில் நடித்து பிரபலமான நடிகர்களாக இருப்பவர்கள் மத்தியில் தற்போது சின்ன திரையில் நடிக்கும் நடிகை, நடிகர்கள் பிரபலமாகி வருகின்றனர். இதன்படி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் 'நினைத்தாலே இனிக்கும்' என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் சுவாதி ஷர்மா.
இவர் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியில் சினிமா துறை போன்று சின்னத்திரையிலும் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பேசியிருக்கிறார்.இதன்படி சின்னத்திரை நடிகைகள் பலர் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து தொடர்ந்து பேசி வருகின்றனர். இந்த வரிசையில் நடிகை சுவாதி ஷர்மாவின் பேட்டி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
நடிகை சுவாதி சர்மா ஆரம்ப கால வெள்ளி திரையில் நடிப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டாராம். ஆனால் எந்த வாய்ப்பும் இவருக்கு கிடைக்கவில்லை. இதனால் தொடர்ந்து வாய்ப்பு தேடி அலைந்த சுவாதி சர்மா சில சினிமா கம்பெனிகளுக்கு அவரின் அம்மாவுடன் சென்று இருக்கிறார்.
அங்கு சுவாதியின் அம்மா முன்னாடியே அட்ஜஸ்ட்மென்ட் குறித்து ஒருவர் மிகவும் அசிங்கமாக பேசி இருக்கிறார். இதனால் கோபமடைந்த சுவாதி அந்த நபரை மிகவும் கடுமையாக திட்டி அங்கிருந்து கிளம்பி வந்து விட்டாராம். இதனால் வெள்ளித்திரையில் நடிப்பதை தவிர்த்து சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று கண்ணீருடன் பேட்டியில் பேசியிருந்தார்.