#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாவ்.. சூப்பர்..! கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பு.! ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்.!
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. உலகின் பல நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கொரோனாவில் இருந்து தப்பிக்க மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என அனைத்து நாடுகளும் அறிவுறுத்தி வந்தது. இந்தநிலையில், கொரோனா தொற்றிலிருந்து தங்களை காப்பாற்றி கொள்ள பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.
இந்தநிலையில், கொரோனா விளைவுகளைத் தடுக்க உதவும் 3 மருந்துகளை போர்ச்சுக்கல் நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லிஸ்பன் நோவா பல்கலைக்கழகத்தின் அங்கமான ரசாயன மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 3 மருந்துகளின் கலவையானது கொரோனா நகலெடுப்பை குறைக்கும் என்று கூறுகின்றனர்.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இந்த மருந்துகளால் வைரஸ் நகலெடுப்பது 50 சதவீதம் மட்டுமே நடந்தள்ளது என்பதை கண்டுள்ளோம். வைரஸ் செயல்பாட்டை குறைக்க ‘என்எஸ்பி 14’ என்ற வைரஸ் புரதத்தில் இந்த மருந்துகளின் கலவை செயல்படும்” என குறிப்பிட்டுள்ளனர். இந்த மருந்துகளானது, கொரோனாவால் மருத்துவமனைகளை சேருவதை கட்டுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காப்புரிமை பிரச்சினையால் மருந்துகளின் பெயர்களை வெளியிடவில்லை என கூறப்பட்டுள்ளது.