மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்படிப்போடு.. ஆண்களுக்கும் இனி கருத்தடை ஊசி அறிமுகம்.. அசத்தல் தகவல்.!
திருமணமான தம்பதிகள் பாதுகாப்பான உடலுறவு விஷயங்களுக்கு கருத்தடைகள் முக்கியத்துவம் பெறுகிறது.
பெண்களுக்கு கருத்தடைக்காக மாத்திரை, ஊசி மற்றும் பிற சாதனங்கள் போன்றவை உள்ளன. ஆண்களை பொறுத்தவரையில் பெருமளவு காண்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஆண்களுக்கும் பக்க விளைவு இல்லாத கருத்தடை ஊசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர் தயாரித்திருக்கிறது.
திருமணமான 33 ஆண்களுக்கு இந்த ஊசியை செலுத்தி சோதனை செய்த நிலையில், அவர்களுக்கு எந்தவிதமான பக்க விளைவும் ஏற்படவில்லை.
அதேபோல, இந்த மருந்து விந்தணுக்களின் செயல் திறன், வேகத்தை குறைப்பதால், அவர்கள் உடலுறவு வைத்தாலும் மந்தநிலையில் இருக்கும் விந்தணுக்களால் குழந்தை பெறுவதற்கான சாத்தியக்கூறு குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.