பெண்களே உஷார்.. 20 - 50 வயதுள்ள பெண்களை கடுமையாக தாக்கும் ரத்தசோகை.. தவிர்ப்பது எப்படி?..! மிஸ் பண்ணிடாதீங்க..!!



Animiya disease problem

பெண்களில் அதிகளவு ரத்தசோகை ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனை எப்படி தவிர்ப்பது என தற்போது காணலாம்.

தற்போதைய காலகட்டத்தில் வாழும் மக்கள் பலரும் பல்வேறு நாடுகளின் மேலுள்ள மோகத்தால் புதுப்புதுவகையான உணவுகளை உண்ணநினைக்கிறார்கள். அதில் பீட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்றவை முக்கியமானதாகும். இதுபோன்ற உணவுகளை உண்பதன் மூலம் உடலுக்கு சத்துக்கள் கிடைப்பதற்கு பதிலாக, உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதனால் பலருக்கும் சத்துக்குறைபாடுகள் ஏற்படுகிறது. 

இதில் முக்கியமானதாக கருதப்படுவது இரும்புசத்து. எலும்புகளுக்கு வலுசேர்க்கும் இரும்புச்சத்து குறைபாடு, இரத்த சோகையையும் உண்டாக்குகிறது. ரத்தசோகை என்றால் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவது மற்றும் அவற்றின் வடிவம் மாறுவதால், சிவப்பு நிறத்தை கொடுக்கும் ஹீமோகுளோபின் செறிவு குறையும். உலகளவில் இனப்பெருக்க வயதில் உள்ள பெண்களில் மூன்றில், ஒரு பகுதியினர் அனீமியா என்ற ரத்தசோகையால் பாதிக்கப்படுகின்றனர். 

கர்ப்பிணிகளில் 40%, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 40% பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது. இதன் அறிகுறிகளாக அதிகமான உடல்சோர்வு, பலவீனம், தலைசுற்றல், மூச்சுதிணறல், சருமம் வெளிறிப்போவது போன்றவையும் கூறப்படுகிறது. சிறுகுழந்தைகளிடம் காணப்படும் பசியின்மை, எடை குறைவு, எளிதில் சோர்ந்துபோவது, வளர்ச்சியின்மை, படிப்பில் கவனமின்மை போன்றவையும் இதன் அறிகுறிகளாகும். 

Animia

பொதுவாக 20 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள்தான் அதிகளவு ரத்தசோகை பாதிப்புக்குள்ளாகின்றனர். சமீபத்தில் நடத்திய ஆய்வின் முடிவில், 10 பெண்களில் 6 பேருக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இது ரத்தசோகைக்கான ஆரம்பகட்ட அறிகுறி என்றும் கூறலாம். 20 முதல் 40 வயதிற்குட்பட்ட பெண்களில் 65 சதவீதபேருக்கு இரும்புசத்து குறைபாடு உள்ளதால் ரத்தசோகையும் ஏற்படுகிறது. 

இதற்கு சில முக்கிய காரணங்களும் உண்டு. மாதவிடாய் காலத்தில் அதிகளவில் ரத்த இழப்பு ஏற்படுவதும் இதற்கு காரணம்தான். படித்த இளம்பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ரத்தஇழப்பு விஷயத்தில் போதிய கவனமில்லாமல் இருப்பதாலும், குழந்தை பருவத்தில் தேவையில்லாத பொருட்களை சாப்பிட்டு, வளர்ந்தபிறகும் களிமண் போன்ற மண்சார்ந்த பொருட்களை சாப்பிடுவதாலும் ரத்தசோகை ஏற்படுகிறது.