ஆப்பிளை கழுவாமல் சாப்பிட போறீங்களா?.. இவ்வாறான தண்ணீரை குடிக்கிறீங்களா?.. இந்த விடியோவை பாருங்களேன்..!
மனிதனின் தொடக்கம் என்பது பல விடைதெரியாத மர்மங்களுடன் இன்று வரை நீடித்து வருகிறது. அதேபோலத்தான் பூமியின் தொடக்கமும். இவ்வாறாக பல விஷயங்கள் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது.
ஆனால், அவை அனைத்தும் ஒரே நேர்கோட்டில் இணைப்பது ஓர் சிறிய உயிரை. அது முதலில் புழு போல இருந்து, பின்னாட்களில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன. நாம் இன்றளவில் புழுக்கள் தொடர்பாக பல செய்திகள் கேட்டிருப்போம், பல வகையான புழுக்களை பார்த்திருப்போம்.
நாம் சாப்பிடும் பொருட்களில், அவை காலாவதியான பின்னர் புழு வைப்பது பலருக்கும் தெரியும். ஆனால், நாம் அலட்சியமாக இருக்கும் அல்லது அவ்வாறு செயல்படுவதும் நம்மை அறியாமலேயே பல புழுக்களை நாம் சாப்பிடுவதற்கு சமம் என்பதை உணர்த்தும் வீடியோ வெளியாகியுள்ளது.
பாக்டீரியாக்களை பொறுத்தமட்டில் உடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களும், கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்களும் இருக்கும். அவற்றில் தேவையில்லாத பாக்டீரியாக்களே நாம் அதிகஅளவில் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகையால், விளையாட்டுத்தனமாக காய்கறி, பழங்கள் போன்றவற்றை வாங்கிவிட்டு கழுவாமல் சமைத்தாலோ, சாப்பிட்டாலோ என்ன நாடாகும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.