ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
குளிர்காலத்தில் எப்போதும் வெந்நீர் குடிக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள்?.. இந்த செய்தி உங்களுக்குத்தான்.!
கோடைகாலம் நிறைவடைந்து தற்போது தென்மேற்கு பருவமழையின் காரணமாகவும், பருவநிலை மாற்றத்தின் காரணமாகவும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மழை பொழிவு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான தருணங்களில் பலருக்கும் காய்ச்சல், சளி போன்றவை ஏற்படும். இதனை சரி செய்ய மருத்துவரை நாடி மருந்து, மாத்திரை வாங்கி சிலர் சாப்பிடுவார்கள். ஒருசிலர் சூடான நீர் குடித்தால் சரியாகிவிடும் என்பார்கள்.
அடிக்கடி நாம் சூடான நீர் கொடுத்துக்கொண்டே இருந்தால் காய்ச்சல், சளி போன்ற தொல்லை இருக்கும்போது நன்மை என்றாலும், அளவை தாண்டினால் சூடான நீரும் ஆபத்தை தரும்.
சூடான நீரை அளவுக்கு மிஞ்சிய சூட்டுடன் குடிப்பது வாய்ப்புண், தொண்டை புண்ணை ஏற்படுத்தும். உடலின் உள்ளுறுப்புகளில் இருக்கும் சவ்வில் புண் மற்றும் கொப்புளத்தை வரவழைக்கும்.
அளவுக்கு அதிக வெந்நீர் குடிப்பது சிறுநீரக வேலையை அதிகரித்து, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலையை கொண்டு வரும். இதனால் அளவோடு சூடுள்ள நீரை குடிப்பதே நல்லது. இல்லையேல் நீரை சுடவைத்து ஆறியதும் குடிக்கலாம். தேவையான நேரத்தில் மட்டுமே மிதமான சூடுள்ள நீரை குடிக்க வேண்டும்.