#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆமணக்கு விளக்கெண்ணெயில் இவ்வுளவு நன்மைகள் உள்ளதா? இன்றே தெரிந்துகொள்ளுங்கள்.!
விளக்கெண்ணெய் ஆமணக்கின் குருதி ஆகும். இது மண்ணில் உள்ள நுட்பமான சத்துக்களை உறிஞ்சு வைத்துக்கொள்கிறது. இதன் மூலமாக கிடைக்கும் விளக்கெண்ணய் தன்னகத்தே பல நன்மைகளை கொண்டுள்ளது. இயேசுவின் பிறப்புக்கு முன்னரில் இருந்து இந்தியர்கள், சீனர்கள், ரோமானியர்கள், கிரேக்கர்களிடம் விளக்கெண்ணெய் பயன்பாடு என்பது இருந்து வந்துள்ளது.
ஆமணக்கு செடியின் இலை வாத நோயாளிகளுக்கு மருந்தாக செய்யப்படுகிறது. ஆமணக்கு இலையை விளக்கெண்ணெயில் இட்டு வதக்கி, மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு வலிக்கு ஒத்தடம் கொடுத்தால் வலி மற்றும் வீக்கம் சரியாகும். குழந்தைப்பேறு அடைந்த பெண்களுக்கு பால் கட்டினால் அல்லது பால் சரிவர சுரக்காத பட்சத்தில், ஆமணக்கு இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.
ஆமணக்கின் இலை கல்லீரல் நோய்க்கு எதிராகவும் செயல்படும். மஞ்சள் காமாலை, கல்லீரல் சுருக்க நோய் மற்றும் கல்லீரல் செயல்திறன் போன்ற பிரச்சனைக்கு ஆமணக்கு இலையின் உலர்ப்பொடி நல்ல பயனை தரும். கீழாநெல்லி இலையோடு ஆமணக்கு, கொழுஞ்சி இலை, கடுகு, ரோகிணி, கரிசாலை சேர்ந்து உள்ளது பொடியாக்கி காலை மற்றும் மாலை வேளையில் அரை கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை சரியாகும்.
ஆமணக்கு விதையில் உள்ள பருப்பை அரைத்து, நான்கு மடங்கு இளநீர் அல்லது தண்ணீர் சேர்த்து காய்ச்சி பிழிந்து விளக்கெண்ணெய் அன்றைய காலங்களில் எடுக்கப்பட்டது. இதனை மருந்து பொருளதாகவும் பயன்படுத்தி இருக்கின்றனர். உடலின் வெள்ளை அணுக்களை ஊக்குவிக்கும் தன்மையும், நிணநீர் கழிவு ஓட்டத்தை விரைவுபடுத்தும் குணமும் விளக்கெண்ணெய்க்கு உள்ளது.
குழந்தைப்பேறு அடைந்த பெண்களுக்கு மலம் எளிதில் வெளியேற ஆமணக்கு எண்ணெயை 10 மி.லி முதல் 20 மி.லி வரை உடல் எடை மற்றும் ஆரோக்கிய நிலையை பொறுத்து கொடுப்பார்கள். அதனைப்போல அடிக்கடி வாய்புண் ஏற்படும் குழந்தைகள், பசி மந்தம் உள்ள குழந்தைகளுக்கு விளக்கெண்ணெயை விபரம் அறிந்தவர்கள் பக்குவப்படுத்தி கொடுப்பார்கள்.