53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
இந்த பழத்தை தினமும் சாப்பிடுறீங்களா? என்னென்ன சத்துக்கள் இருக்குதுன்னு தெரிஞ்சிக்கோங்க.!
தினமும் எதோ ஒரு பழத்தை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அந்த வகையில், இன்று ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம்.
ஆப்பிளில் வைட்டமின்கள், புரோட்டின்கள் போன்று உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதில் உள்ள பெக்டின் என்ற கரையும் நார்சத்து, உடலில் உள்ள கேடான கொழுப்புகளை கரைக்கிறது.
ஆப்பிள் பழத்தில் உள்ள க்யூயர்சிடின் ஆண்டி-ஆக்சிடென்ட் மூளையில் உள்ள செல்கள் அழியாமல் பாதுகாத்து, நரம்பு மண்டலத்தின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. மேலும், பைட்டோ நியூட்ரியண்ட் இரத்த சர்க்கரை அளவை சீர்படுத்த உதவி செய்கிறது.
மேலும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி, சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் போன்றவையும் பேருதவி செய்கிறது. இதனைப்போல, தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வர வலுவிழந்து இருக்கும் பற்கள் வலுப்பெறும். பற்களின் அழகும் அதிகரிக்கும்.