நண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்... தெரிஞ்சுக்கோங்க அசந்துபோவீங்க..!



Benefits of Eating Nandu or Crab

கடல், வயல்வெளி, கண்மாய் பகுதிகளில் நமது ஊர்களில் நண்டு அதிகளவு காணப்படும். இவற்றில் பெரும்பாலும் மக்கள் கடல் நண்டுகளை அதிகளவு விரும்பி உண்ணுவார்கள். நண்டு தன்னகத்தே பல மருத்துவ குணங்களை கொண்டது. இன்று நண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம். 

இரத்த சோகை : 

நமது உடலில் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு தேவைப்படும் வைட்டமின் பி 12 நண்டில் அதிகளவு உள்ளது. இதனால் நண்டு சாப்பிட்டால் இரத்த சோகை பிரச்சனை ஏற்படுவதை தடுக்கலாம். 

Crab

வளர்ச்சி அதிகரிப்பு : 

புரோட்டீன் என்பது ஒவ்வொருவரின் வளர்ச்சிக்கும், எலும்புக்கும் இன்றியமையாத ஒன்றாகும். இதனை குழந்தைகள் சாப்பிட்டால் அவர்களின் வளர்ச்சி அதிகரிக்கும். உரோமம், நகம், சருமம் போன்றவையும் ஆரோக்கியத்துடன் இருக்கும். 

முகப்பரு : 

முகத்தில் பருக்கள் ஏற்பட்டு இருந்தால் நண்டினை சாப்பிடலாம். நண்டில் இருக்கும் ஜிங்க், எண்ணெய் சுரப்பினை கட்டுப்படுத்துகிறது. 

Crab

இதயம் பலம்பெறும் : 

நண்டுகளில் இருக்கும் ஒமேகா 3 பெக்டி ஆசிட் காரணமாக, இரத்தத்தில் இருக்கும் கொழுப்புகளின் அளவு குறைக்கப்படுகிறது. இதனால் இதய நோய் தடுக்கப்படுவது மட்டுமல்லாது, இதயமும் பலமாகும். 

இரத்த அழுத்தம் : 

நமது உடலில் உள்ள நரம்பு மற்றும் தசையின் இயக்கத்துக்கு மக்னீசியம் முக்கியம் ஆகும். இந்த மக்னீசியம் நண்டில் அதிகளவு உள்ளது. இதனால் நரம்புகள் உடலுக்கு ஏற்றவாறு தளர்ந்து, இரத்த அழுத்தத்தின் அளவை சீராக மாற்றுகிறது.