அடேங்கப்பா.. ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் இவ்வுளவு நன்மைகளா?.. அசத்தல் தகவல்.!



Benefits of Orange Fruit Tamil

தினமும் ஒரு பழம் அல்லது பழச்சாறுகளை சாப்பிடுவது நமது உடலின் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. அந்த வகையில், ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இன்று காணலாம். 

ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் இரத்த குழாய்களில் சேரும் உடலுக்கு தேவையற்ற கொழுப்புகளை அகற்ற உதவுகிறது. இதய பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. ஜீரண சக்தியை மேம்படுத்தி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. 

இதில் உள்ள ஆண்டி ஆக்சிடன்ட், உடலில் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை அழிக்கிறது. வைட்டமின் சி சத்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இரத்தத்தின் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கிறது. 

Orange

மேலும், பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, உயர் இரத்த அழுத்தத்தை தவிர்க்க வழிவகை செய்கிறது. முடிகொட்டும் பிரச்சனையை சரி செய்து, முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. 

நமது வாய்களில் ஏற்படும் துர்நாற்றத்தை அகற்றி, ஈறுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் சொத்தைப்பல், வாய் கிருமிகள் போன்ற பிரச்சனையையும் சரி செய்கிறது. அவைகள் ஏற்படாமலும் பாதுகாக்கிறது. தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படும் நபர்கள், உறங்குவதற்கு முன்னதாக ஆரஞ்சு பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல உறக்கம் வரும்.