திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வயதானவர்களை குறி வைக்கும் எலும்பு பிரச்சனை.. இதோ சூப்பர் தீர்வு.!
வயதான காலத்தில் பலரும் எலும்பு தேய்மானம் ஏற்பட்டு மிகுந்த துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். இவர்கள் பல்வேறு மருத்துவமனை மற்றும் பிசியோதெரபிஸ்ட் என்று முயற்சி செய்தாலும் கூட அவர்களுக்கு உடல்நிலை சரியாவது கிடையாது.
மிகுந்த துன்பத்திற்கு அவர்களை உள்ளாக்கும் இந்த எலும்பு தேய்மானத்தை தடுக்க உலர் பழங்களை பயன்படுத்துவது கை கொடுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து இருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் உடல் உறுப்புகளின் செயல்பாடு ஆனது குறைய துவங்குகிறது.
இதன் காரணமாக அது உடல் நலத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் எலும்பு தேய்மானம் ஒரு முக்கிய பாதிப்பு ஆகும். இதை தடுக்கின்ற முக்கிய உணவாக உலர் பழங்கள் இருக்கின்றன.
பிஸ்தா மற்றும் பாதாம் உள்ளிட்ட உலர் பழங்களை அவர்கள் சாப்பிடும் போது, அதில் அவர்களுக்கு தேவையான கால்சியம் மற்றும் விட்டமின் டி உள்ளிட்டவை இருக்கின்றன. எனவே இது எலும்பு தேய்மானத்தை கட்டுக்குள் வைக்கிறது.
பொதுவாக வயதானவர்களுக்கு பற்கள் மிகவும் பலவீனமாக இருக்கக்கூடும். எனவே அவர்கள் இதுபோன்ற உலர் பழங்களை ஸ்மூத்தியாக அரைத்து சாப்பிடலாம். அல்லது 3 மணி நேரங்கள் வரை ஊற வைத்து சாப்பிடலாம்.