அச்சச்சோ.. பெண்களே உஷார்.. மார்பக அளவை, அழகை அதிகரிக்க அறுவை சிகிச்சை செய்தால் பேராபத்து..!



Breast Beauty Surgery Dangerous Tamil

பெண்களுக்கு மார்பகத்தின் அளவு என்பது அவர்களின் வாழ்வியல் நடைமுறை, உணவுப்பழக்க வழக்கத்தை பொறுத்து அமைகிறது. ஆனால், சில நடிகைகள் கவர்ச்சியை காண்பிக்க மார்பகத்தை அறுவை சிகிச்சை செய்து பெரிதாக்குவது அல்லது பெரிதாக உள்ள மார்பகத்தை சிறிதாக்குவது நடந்து வருகிறது. இன்று பல்வேறு தகவலை அறியும் சூழ்நிலை உள்ளதால், சில பெண்களும் இதனை மேற்கொள்வது உண்டு. 

செயற்கையாக மார்பக அழகை அதிகரிக்க செய்யப்படும் அறுவை சிகிச்சையின் போது, செயற்கையான இழை மார்பகத்தின் மேலே வைக்கப்படும். இந்த இழையின் தன்மையை பொறுத்து செயற்கை மார்பகம் சிலிகான் மற்றும் சலைன் என்ற இரண்டு பிரிவாக பிரிக்கப்படுகிறது. சிலிகான் பொதுவாக மார்பக சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த செயற்கை மார்பக இழையில் சிலிகான் ஜெல் நிரப்பப்பட்டு மார்பகத்தில் பொருத்தப்படும். சலைன் அறுவை சிகிச்சையில் உப்பு நீர் கொண்ட செயற்கை பொருள், சிலிகான் ஓடுகளில் அடைத்து பயன்படுத்தப்படுகிறது. மார்பக அழகை அல்லது அளவை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளில் சலைன் வகை அறுவை சிகிச்சை சிறந்ததாகவும் கருதப்படுகிறது.

Breast

இந்த அறுவை சிகிச்சையின் போது அபாயங்கள் தவிர்க்கப்பட்டாலும், பக்க விளைவுகள் இருக்காது என்று கூற இயலாது. அதனால் ஏற்படும் பல்வேறு எதிர்கால பிரச்சனைகள் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும் என்பதே நிதர்சனம். மார்பக அழகை அதிகரிக்க மேற்கொள்ளப்படும் சிகிச்சையில் உள்ள பாதகங்கள் குறித்து இன்று காணலாம். 

மார்பக அறுவை சிகிச்சைக்கு பின்னர் பெரும் பிரச்சனையாக இருப்பது லீக்கேஜ். சிலிகான் அல்லது சலைன் ஒழுக தொடங்கும் பட்சத்தில், மார்பில் அதன் விளைவுகள் தெரியவரும். இதனால் மயக்கம், நரம்பில் எரிச்சல், குமட்டல் போன்றவை ஏற்படலாம். சலைன் வகை மார்பக சிகிச்சையில் பாக்டீரியாவை உருவாக்கும். 

அறுவை சிகிச்சையின் போது உபயோகம் செய்யப்படும் செயற்கையான பொருட்கள், உடலால் இயற்கையாக ஏற்றுக்கொள்ளாது என்பதால், மார்பகத்தில் வலி மற்றும் வீக்கம், எரிச்சல் போன்றவை ஏற்படும். இது செயற்கையை நமது உடல் இயற்கையாக எதிர்க்கும் தன்மையால் நடக்கிறது. 

Breast

மார்பக அறுவை சிகிச்சைக்கு பின்னர் மார்பகத்தின் அளவுகள் வெவ்வேறாக வாய்ப்புகள் உள்ளன. அறுவை சிகிச்சைக்கு பின்னர் மார்பகத்தின் வடிவம் மற்றும் அளவுகள் மாறுபடும். மேலும், சிகிச்சை தவறாக முடிவடையும் பட்சத்தில், இயற்கையாக இருந்த அழகும் பாழாகும். 

ஒருமுறை மார்பக அறுவை சிகிச்சை செய்ய தொடங்கினால், மீண்டும் 7 முதல் 8 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் அதனை மேற்கொள்ள வேண்டும். செயற்கையாக மார்பக அழகை அதிகரிப்பதால், அவை அவ்வப்போது மாற்றும் வகையில் தான் இருக்கும். அவ்வாறு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யாமல் இருந்தால், மார்பகத்தில் விரிசல் அல்லது ஒழுகல் பிரச்சனை ஏற்படும். 

செயற்கை மார்பகத்தை பொறுத்த வரையில் விரிசல் பிரச்சனை என்பது, அதன் குறைபாடுகளில் முதன்மையானதாக இருந்து வருகிறது. மார்பகத்தின் ஓடுகளில் ஏற்படும் விரிசல் சிலிகான் ஜெல் அல்லது உப்பு நீர் போன்றவற்றை உடலில் ஓடத்தொடங்குகிறது. இந்த விரிசல் அறிகுறிகளை வெளியே காண்பிப்பது இல்லை. 

Breast

மார்பக அறுவை சிகிச்சையில் பெண்களுக்கு தமனி அருகே அரிப்புகள் ஏற்படலாம். செயற்கை அமைப்பு தமனியை பாதித்து, அதனுள் வீக்கம் மற்றும் எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் தழும்புகள், வாழ்நாட்கள் முழுவதும் மறையாமல் இருக்கும். மார்பக அழகை அதிகரிக்க அறுவை சிகிச்சை செய்யும் பெண்களுக்கு இது வருத்தத்தையே தரும். 

நியூரோடாக்சின் பொருட்களை கொண்ட செயற்கை மார்பகத்தால், சிலிகான் ஜெல்லில் சில நேரங்களில் ஒழுகல் ஏற்பட்டால், அவை நரம்பு மண்டலத்தை பாதிக்கும். சிலிகான் ஜெல் இயற்கையாகவே கார்சினோ ஜெனிக் என்ற பொருளை கொண்டுள்ளதால், அதனால் மார்பக புற்றுநோய் ஏற்படாது என்றாலும், வயிற்று புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்றவை ஏற்படலாம். 

செயற்கை மார்பக சிகிச்சையை பொறுத்த வரையில், மார்பகத்தின் அளவு மற்றும் வடிவம் போன்றவை அதிகமாக இருக்கும். இதனை வெளியே தெரியாத அளவு மறைப்பது கடினம் ஆகும். சலைன் வகை அறுவை சிகிச்சைகள் மார்பகத்தின் இயற்கை அழகை பாழாக்கும்.