அச்சச்சோ.. பெண்களே உஷார்.. மார்பக புற்றுநோய் ஏற்பட காரணம் என்ன? தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன?.!



Breast Cancer Causes and Solution Tamil

இந்தியாவை பொறுத்தளவில் நாளுக்கு நாள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெண்களின் 50 வயதுக்கு மேல் பரவலாக ஏற்பட்டு வந்த மார்பக புற்றுநோய், இன்றளவில் 30 வயதிலேயே ஏற்பட தொடங்கியுள்ளது. டெல்லி, சென்னை, பெங்களூர், மும்பை மற்றும் திருவனந்தபுரம் போன்ற நகரங்களில் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இதனால் மார்பக புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது? அதில் இருந்து தற்காத்துக்கொள்ள நாம் செய்ய வேண்டியவை என்ன? மருத்துவ பரிசோதனைகள் என்ன? என்பது குறித்து நாம் அறிந்து வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது. அது குறித்து விரிவாக இன்று காணலாம். 

மார்பக புற்றுநோய்க்கான காரணங்கள்:

பெண்களின் தாய், சகோதரிக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருந்தால், மரபணு வழியே ஏற்படுதல்.
மிகச்சிறிய வயதிலேயே பருவமடைதல். 
உடல்நலக்குறைவால் அதிகளவில் ஹார்மோன் மாத்திரை சாப்பிடுதல்.
உடல் பருமன் மற்றும் உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல்.
புகை மற்றும் மதுபானம் அருந்தும் பழக்கம்.
இரத்த அழுத்த பிரச்சனை, சர்க்கரை நோய் பிரச்சனை.
உடலுக்கு கடுகளவு நன்மை செய்யாத மேற்கத்திய உணவு பழக்கம், அதிக கொழுப்பு கொண்ட உணவுகள் மற்றும் துரித உணவுகளை அதிகளவு சாப்பிடும் பழக்கம் போன்றவைகளால் ஏற்படுகின்றன.

Breast Caner

மார்பக புற்றுநோயை தடுப்பதற்கான வழிமுறைகள்:

பெண்கள் குறைந்தபட்சம் மாதம் ஒருமுறையாவது மார்பகத்தை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு சுய பரிசோதனையின் போது மார்பகத்தில் வீக்கம், மார்பக தோல்களில் அதீத சுருக்கம், இரத்தக்கசிவு போன்றவை இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. 

மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப மேமோகிராம் எக்ஸ்ரே பரிசோதனை செய்தால், மார்பகத்தில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் கண்டறியப்படலாம். இந்த பரிசோதனை மூலமாக மார்பகத்தில் கட்டி இல்லை என்றாலும், அது ஏற்பட வாய்ப்பிருந்தால் அதனை உறுதி செய்யும்.