மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க இந்த விஷயம் மட்டும் போதும்.! உடனே டிரை பண்ணுங்க.!
தாய்ப்பால் சரிவர சுரக்காமல் நிறைய தாய்மார்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இயற்கையான முறையில் தாய்ப்பாலை சுரக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். முக்கிய காரணம் உணவுகளை பயன்படுத்தி இயற்கையான முறையில் தாய்ப்பாலை சுரக்க வைக்க முடியும். அவை என்னென்னவென்று பார்க்கலாம் வாங்க.
தாய்ப்பால் சுரப்புக்கு இன்றியமையாத ஒரு பொருள் வெந்தயம். பால் சுரப்பை ஏற்படுத்தக்கூடிய பல பவுடர்களிலும் இந்த வெந்தயம் கலக்கப்படுகிறது. மாத்திரை வடிவிலும் இந்த வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு டம்ளர் நீரில் ஒரு நாள் இரவு முழுவதும் வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் சாப்பிட்டால் பால் சுரப்பு அதிகரிக்கும்.
வாய் கோளாறுகள் மற்றும் செரிமானத்திற்கு பயன்படுத்தப்படும் சோம்பில் டீ தயாரித்து பருக்கினால் குழந்தை இல்லாத பெண்களுக்கும் விரைவில் குழந்தை பிறக்கும். கர்ப்பிணிகளுக்கு இது மிகவும் நல்லது. தாய்ப்பால் சுரக்காத பெண்கள் இந்த சோம்பு டீயை குடிப்பதால் அவர்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
கால்சியம் சத்து அதிகம் உள்ள எள் உருண்டையை சாப்பிடும்போது குழந்தையின் வளர்ச்சி அதிகரிப்பதுடன் நல்ல பால் சுரப்பும் ஏற்படும். வெறும் எள்ளை மட்டும் சாப்பிட சிலருக்கு பிடிக்காது. இவர்கள் பாதாம், பேரிச்சை போன்ற நட்ஸ்களை அதில் கலந்து உருண்டை பிடித்து சாப்பிடலாம். சுவையாக இருப்பதுடன் இது அதிக ஆரோக்கியத்திற்கும் உதவும்.
முருங்கைக்காயை சாம்பார் அல்லது கிரேவி செய்து சாப்பிடுவது பலருக்கும் மிகவும் பிடிக்கும். இதனால் பால் சுரப்பது அதிகரிக்கும். மசூர் பருப்பு, பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. இதை பயன்படுத்தி உணவு செய்து அன்றாடம் சாப்பிட்டு வருவது உங்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்க உதவும். அதிகப்படியான தாய்மார்கள் பால் சரி வர கிடைக்கவில்லை குழந்தை பசியில் அழுகிறது என்று கூறி அவர்களுக்கு பவுடர் பால், அல்லது வேறு எதையாவது கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். இதனால் குழந்தை தாயின் உடலில் உறுதி குடிப்பது குறைந்து விடும். Lactation எனப்படும் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்க குழந்தை பாலை உறிஞ்சி குடிப்பது மிகவும் அவசியம். அந்த ஹார்மோன் சுரந்தால்தான் பால் உற்பத்தி அதிகரிக்கும்.