மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண்களை வாட்டிவதைக்கும் மூட்டுவலி.. காரணம் என்ன?.!
சமீபமாகவே மூட்டு வலியினால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மூட்டு வலி என்பது அனைத்து வயதினருக்கும் பொதுவானதாக மாறியுள்ளது. இதனால் பெண்களே அதிகளவில் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மூட்டு வலியால் அவதியுறுவோர்கள், அன்றாட வாழ்க்கையில் சிரமப்படுகின்றனர்.
இதனால் சரியான வாழ்க்கை நெறிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகியுள்ளது. மூட்டு வலி ஏற்படும் தொடக்க நிலையிலேயே சுதாரித்து செயல்பட்டால், எதிர்காலத்தில் ஏற்படும் அதன் தக்க விளைவுகளில் இருந்தும் தப்பிக்க இயலும்.
மூட்டு வலிக்கான காரணங்கள் :
தசை நார்கள் மற்றும் மூட்டு எலும்பு பகுதியில் ஏற்படும் காயங்கள்.
மூட்டின் இயக்கத்தை எளிதாக்கும் ப்ளூயீடு நிறைந்துள்ள பகுதியில் ஏற்படும் பாதிப்பு.
கால்களில் தொடை எலும்பு பகுதியில் இருந்து கால் முட்டிக்கு கீழே உள்ள எலும்பு வரை தசை நார் நீண்டுள்ளதை ஆண்டிரியார் க்ருஷ்யியேட் லிகமெண்ட் ஏ.சி.எல் என்று அழைக்கிறோம். இந்த வகையான தசைநாரில் ஏற்படும் காயம் ஏ.சி.எல் இஞ்சூரி என்று அழைக்கப்படுகிறது.
இவை காயம் மற்றும் கடுமையான வலியை ஏற்படுத்தும். பொதுவாக கால்பந்து, கைப்பந்து விளையாடும் நபர்கள் இயல்புக்கு மாறாக கால்களை உபயோகம் செய்கையில் இவ்வகை காயம் திடீரென ஏற்படும்.
மூட்டு எலும்பு அல்லது மூட்டு கிணத்தில் ஏற்படும் லேசான காயம் கூட அதிக வலியை ஏற்படுத்தலாம். நாற்காலியில் ஏறி நின்று வேலை செய்யும் போது கீழே விழுந்தால் அல்லது இருசக்கர வாகன பயணத்தின் போது கீழே விழுந்தால் மூட்டில் காயம் ஏற்படும். எலும்பு பலவீனமான நபர்கள் கீழே விழுந்தால் கூட காயம் ஏற்படலாம்.
நமது உடலில் உள்ள மெனிஸ்கஸ் என்ற ஜவ்வு திசுக்கள் உடலில் ஏற்படும் அதிர்வுகளை தாங்கும் ஷாக் அப்சர்பர் போன்றவை ஆகும். இவை கால் மூட்டுகள் அதிர்வுகளை தாங்கும். எலும்புகளை பாதுகாக்கும் மெனிஸ்கஸ் பகுதியில் முறிவு ஏற்பட்டாலும், மூட்டு வலி போராடும்.
மூட்டுப்பகுதியின் சிறப்பு இயக்கத்திற்கு திரவம் உள்ளது. இவை மூட்டுகிண்ணத்தின் கீழ் பகுதியில் உள்ளது. இதில் நீர் சேர்ந்தால் மூட்டின் இயல்பான இயக்கம் என்பது தடைபட்டு மூட்டு வலி ஏற்படும்.
இடுப்பு பகுதி முதல் மூட்டு வரை செல்லும் தசை பகுதியை இழியோடிப்பியல் பாண்ட் என்று அழைக்கிறோம். இந்த தசை முறுக்கிக்கொண்டு இருந்தாலும் மூட்டு வலி ஏற்படும். தடகளப்போட்டியில் ஈடுபடும் நபர்களுக்கு இவ்வகை பாதிப்பு ஏற்படும்.
மூட்டுகிண்ணம் இடம்பெயர்ந்து செல்லுதல், இடப்பு மற்றும் கால் பாதத்தில் ஏற்படும் வலி போன்றவையாலும் மூட்டு வலி ஏற்படும். சில வகை வாத நோய்கள் மூட்டு வலிக்கு காரணமாகிறது.
இயல்பாகவே வயதான நபர்கள் மூட்டு வலியால் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. 60 வயதினை கடந்த பெண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படலாம். இவை மூட்டு தேய்மானத்தால் ஏற்படுகிறது. மூட்டு வலி தொடர்ந்து இருக்கும் பட்சத்தில், எந்த வயதினராக இருந்தாலும் மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொண்டு சிகிச்சை பெறுவது நல்லது.