பெண்களை வாட்டி வதைக்கும் வெண்குஷ்ட பிரச்சனை.. தவிர்ப்பது எப்படி? எதனால் ஏற்படுகிறது?..!



Causes of Skin Problem Venkushtam

தோல் நோயில் கடுமையானது வெண்குஷ்டம். இதனால் உடல்நலம் பெருமளவு பாதிக்கப்படாது, தொற்று நோய் இல்லை என்றாலும் கட்டாயம் கவனிக்க வேண்டியதே. பெண்களுக்கு வெண்குஷ்டம் அதிகளவு ஏற்படும் என்ற நிலையும் உள்ளது. வெண்குஷ்டத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 30 % நபர்கள் மூலமாக குடும்ப உறுப்பினர்களுக்கும் இது ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், நமது அன்றாட வாழ்க்கையில் உள்ள பழக்க வழக்கம் காரணமாக இது ஏற்படும் என்றும் தெரியவருகிறது.

உராய்வு காயம் ஏற்பட வாய்ப்புள்ள கால் மூட்டு, கை மூட்டு மற்றும் மணிக்கட்டு பகுதிகளிலும், சிறிய அளவிலான வெட்டுக்காயம், நகம் கொண்டு பிராண்டிய இடத்திலும் நோய் ஏற்படலாம். தரமற்ற குங்கும பொட்டினை உபயோகம் செய்வதால், இது பெண்களுக்கும் ஏற்படலாம். மேலும், பிளாஸ்டிக் பையை வைத்துள்ளவர்களுக்கும் வெண்குஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. 

health tips

சில நபர்களுக்கு ரப்பர் செருப்பு, மூக்கு கண்ணாடி சட்டம் ஒட்டும் காது பகுதி, இறுக்கமாக அணியும் பாவாடை, உள்பாவாடை, நாடாக்களின் அழுத்தம் காரணமாகவும் வெண்குஷ்டம் ஏற்படும். மேலும், தொடக்கத்தில் முகம், அக்குள், தொடை இடுக்கு, மார்பக காம்பு, பிறப்புறுப்பு பகுதிகளில் அதிகளவு வெண்குஷ்டம் ஏற்படலாம். 

ஒருசிலருக்கு வெண்குஷ்டம் நீஇடது இருக்கும். சிலருக்கு மெதுவாக பரவி அதுவே குணமாகும். மனிதனின் தோல்களுக்கு நிறமளிக்கும் மெலனின் நிறமி அடர்த்தியை பொறுத்து தோலின் நிறம் அமைகிறது. வெண்குஷ்ட பிரச்சனை இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை எடுக்க வேண்டும். செருப்பு மற்றும் உள்ளாடை போன்றவை உபயோகம் செய்கையில் கவனத்துடன் இருக்க வேண்டும்.