வீட்டில் வளர்க்கும் செடிகளில் பூச்சித்தொல்லை தாங்க முடியலையா?.. இதை ட்ரை பண்ணி பாருங்க..! அசத்தல் டிப்ஸ்..!!



Control Pesticides Issue Naturally Tamil

 

நமது வீட்டைச் சுற்றிலும், மாடியிலும் அழகான பூச்செடிகளை நாம் வளர்த்திருப்போம். அதில் பூச்சிகள் பாதிப்பு ஏற்படும். அதனை சரி செய்ய கடைகளில் செயற்கையான மருந்துகளை வாங்கி கலக்காமல் நாம் இயற்கையான உரங்களை பயன்படுத்துவது நல்லது. 

ஏனெனில் நாம் அதன் மீது அடிக்கும் கெமிக்கல் மண்ணின் தன்மையை மாற்றி விடும். பக்க விளைவுகள் இன்றி இயற்கையான முறையில் பூச்சிகளை விரட்ட வேப்பிலை உதவி செய்யும். கசப்பு தன்மைக்கு பொதுவாக பூச்சிகள் ஓடிவிடும் என்பதால் சிறிதளவு வேப்பிலையை எடுத்துக்கொண்டு சுத்தமான நீரில் கழுவி, பாத்திரத்தில் நீர் ஊற்றி பத்து நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். 

Pesticides

இந்த தண்ணீர் பச்சை நிறத்தில் மாறியதும் பேக்கிங் பவுடர் இரண்டு ஸ்பூன் சேர்த்து இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அல்லது வாரம் ஒருமுறை நமது பூந்தோட்டிகளின் மீது வைத்திருக்கும் செடிகளின் மீது தெளித்தால் இது சிறந்த இயற்கை மருந்தாக செயல்படும். இதன் மூலமாக எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் சத்தான காய்கறிகள், பழங்கள், கீரைகள் நமக்கு கிடைக்கும்.