#HealthTips: வயிற்று வலி, வாயு தொல்லைக்கு குட் பை... பூண்டு கஞ்சி செய்வது எப்படி?.!



Control Stomach Pain and Air Problem Using Poondu Kanji Garlic Rice Soup

வாய்தொல்லை, வயிற்று வலி காரணமாக அவதிப்படும் நபர்கள், பூண்டு கஞ்சியை வாரம் இரண்டுமுறை என்ற விகிதத்தில் பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதனை எப்படி செய்வது என இன்று காணலாம். 

இன்றுள்ள காலத்தில் கண்களுக்கு விருந்தளிக்கும் வண்ணமயமான உணவுகளை அதன் விபரீதம் புரியாமல் சாப்பிட்டு வருகிறோம். அதனால் உடலுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. மலச்சிக்கலில் தொடங்கி, வாய்தொல்லை என ஒவ்வொன்றாக அதிகரிக்கிறது. வாயுத்தொல்லையில் இருந்து விடுபட பூண்டு கஞ்சி செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - அரை கிண்ணம்,
பூண்டு - 75 கிராம்,
மிளகு - அரை தேக்கரண்டி,
சீரகம் - 1 தேக்கரண்டி,
வெந்தயம் - அரை தேக்கரண்டி,
நல்லெண்ணெய் - சிறிதளவு,
தண்ணீர் - தேவையான அளவு,
உப்பு - தேவை ஏற்ப,
காய்ச்சிய பால் - 1 கிண்ணம்.

செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட ஆசிரியை நன்றாக கழுவி, சிறிது நேரம் ஊறவைத்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் பூண்டினை தோல் உரித்து வைக்கவும். வானெலி அல்லது குக்கரை கடாயில் வைத்து எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம் மற்றும் வெந்தயம் போன்றவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். 

அதனைத்தொடர்ந்து, பூண்டு சேர்த்து வதக்கி, அது நன்றாக வதங்கியதும் உப்பு மற்றும் அரிசியை சேர்ந்து நீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். குக்கராக இருந்தால் 6 விசில் போதுமானது. பின்னர், அரிசி கலவையை நன்றாக ஒருமுறை மசித்து பால் கலந்து இறக்கினால் சுவையான மற்றும் உடலுக்கு நன்மை அளிக்கும் பூண்டு கஞ்சி தயார்.