அச்சச்சோ.. தினமும் சிக்கன் சாப்பிடும் பழக்கம் கொண்டவரா நீங்கள்?.. இந்த பதிவு உங்களுக்குத்தான்.!



Daily Chicken Eating Persons should know about Problems

 

அசைவ உணவுகளில் பெரும்பாலானோர் விரும்பி உண்ணும் உணவுகளில் முதன்மையாக இருப்பது சிக்கன். உடல் சூட்டை அதிகரிக்கும் சிக்கன், இன்றளவில் உணவகங்களில் விதவிதமாக சமைத்து வழங்கப்படுகிறது. 

இதனை பலரும் சுவைத்து சாப்பிட்டு வருகிறார்கள், ஆனால் இதனை அதிக அளவு எடுத்துக் கொள்வது நமது உடலுக்கு பெரும் தீங்கை விளைவிக்கும் என்று பல ஆய்வுகளில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. 

health tips

சிக்கனில் இருக்கும் புரதச்சத்து உடலுக்கு நன்மையை தருகிறது என்றாலும், அதில் அளவு என்பது முக்கியம். தினமும் சிக்கனை எடுத்துக் கொள்வது, உடலில் கொழுப்புகளை அதிகரிக்க முதல் காரணமாக இருக்கும். 

அதேபோல, ரத்தத்தில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கப்பட்டு, இதயத்தில் அவை பிரச்னையையும் உண்டாக்கும். உடல் எடையும் அதிகரிக்கும். இதனால் அது சார்ந்த பிற பிரச்சனைகள், மாரடைப்பு போன்றவையும் ஏற்படலாம்.