தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் இவ்வுளவு பேராபத்தா?... கேடான ரசாயனங்கள்.. பெண்களே கவனம்.!
பெரும்பாலான பெண்களுடைய அழகு ஒப்பனை பணிகள் லிப்ஸ்டிக் எனப்படும் உதட்டுச்சாயம் இல்லாமல் நிறைவு பெறுவதில்லை. முகத்தின் அழகுக்கு அழகுசேர்க்கும் உதட்டுச்சாயம், பெண்களை பார்த்தவுடன் கவரும் வகையில் இடம்பெற பேருதவி செய்கிறது. ஆனால், செயற்கையான லிப்ஸ்டிக் மனித உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் என தெரியவந்துள்ளது.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடந்த ஆய்வுகளின் முடிவின்படி, தற்போதைய நிலையில் மக்களால் பயன்படுத்தப்படும் உதட்டுசாயத்தில் குரோமியம், ஈயம், அலுமினியம், காட்மியம் போன்ற தீங்கு விளைவிக்கும் பல நச்சுக்கள் இருப்பதாக பகீர் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்ணோ ஆணோ அழகுக்காகவோ அல்லது விளம்பரத்திற்காகவோ தொடர்ந்து லிப்ஸ்டிக் பூசி வந்தால், பல்வேறு உடல்நல பிரச்சனைகள் போராடும் என்றும், 24 மணிநேரத்திற்குள் 3 முறைகள் அல்லது அதற்கு மேல் லிப்ஸ்டிக் பூசி வந்தால் குரோமியம் உடலில் அதிகரித்து பேராபத்தை ஏற்படுத்தலாம் என்றும், வயிற்று கட்டிகள் தொடர்பான பிரச்சனை உருவாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனைப்போல, லிப்ஸ்டிக்கில் இருக்கும் பித்தலேட் என்ற ராயணம் நாளமில்லா சுரப்பிகளின் அமைப்பை பாதிக்கிறது. ஈயம் நீண்ட கால ஆரோக்கியத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தும். பாளி எத்திலீன் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். பாரபேன் மெழுகு ரசாயனம் சருமத்தில் ஊடுருவி, மனசோர்வு மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.
நினைவில்கொள்:
1. அடர்த்தியான நிறம் கொண்ட லிப்ஸ்டிக்கில் அதிகளவு நச்சு ரசாயனங்கள் உள்ளது. லிப்ஸ்டிக் பயன்படுத்தும் முன்னதாக ஒருமுறை யோசனை செய்து அதனை உபயோகம் செய்வது நல்லது.
2. லிப்ஸ்டிக்கு பதிலாக இயற்கையான உதட்டுச்சாயம் போன்றவற்றை பயன்படுத்தலாம். எளிய முறையில் அழகு பெற பீட்ரூட்டை உபயோகம் செய்யலாம். அதனால் எந்த பக்க விளைவும் இல்லை.
3. பெண்கள் தங்களின் கர்ப்பகாலத்தின் போது லிப்ஸ்டிக் பயன்பாடுகளை தவிர்க்க வேண்டும். இதனால் கருச்சிதைவு அபாயமும் உள்ளன. வாரத்திற்கு 2 முதல் 3 முறைக்கு மேல் எக்காரணம் கொண்டு செயற்கை உதட்டுச்சாயம் கூடாது.
Caution: வெளிநாட்டில், அவர்களின் கெடுபிடியான சட்ட அனுமதிப்படி தயாரிக்கப்படும் லிப்ஸ்டிக்கிலேயே இவ்வுளவு இரசாயனம் என்றால், விளம்பரத்திற்காக கண்டதை சொல்லி, நிறத்தை கூட்ட சாயத்தை ஏற்றி, கெமிக்கலை கொட்டித்தீர்க்கும் நம்ம ஊர் விற்பனையாளர்கள் உற்பத்தி முறைக்கு விளக்கங்கள் சொல்ல தேவையே இல்லை. சுதாரித்துக்கொள்ளுங்கள். எதிர்கால பாதிப்புகளை சந்தித்து அவதியுற வேண்டாம்.