காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
அச்சச்சோ... தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பவரா நீங்கள்.. உங்களுக்குதான் எச்சரிக்கை..!
உடல் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமானது. ஆனால் அதற்காக அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் உடல்நலபிரச்சனைக்கு வழிவகுத்துவிடும். தண்ணீர் குடிப்பது நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க செய்யும். மேலும் சருமத்திற்கும் பொலிவு தரும்.
ஆனால் சிலர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது என்ற எண்ணத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோம் என்று கணக்கிடாமலேயே குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் பருகிக் கொண்டே இருப்பார்கள்.
அப்படி செய்வதால் உடலுக்கு தேவையான அளவை விட அதிகளவு சோடியம் சேர்வதால், தலைவலி, உடல்சோர்வு மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அத்துடன் நமது உடலிலிருந்து வெளியேறும் சிறுநீரகம் சற்று மஞ்சள் நிறமாக இருக்க வேண்டும்.
சிலர் தெளிவான வெள்ளை நிறத்தில் சிறுநீர் இருப்பதுதான் ஆரோக்கியம் என்று நினைப்பார்கள். ஆனால் அது அதிகமாக தண்ணீர் குடிக்கிறார்கள் என்பதற்கான அறிகுறியாகும். உடலுக்கு தேவையான அளவு தினமும் 8 முதல் 10 டம்ளர் நீர் பருகுவது போதுமானது.
சிலர் அரை மணிநேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழிக்கும் வழக்கத்தை கொண்டிருப்பார்கள். இரவில் தூங்கும் போது கூட இந்த நிலை நீடிக்கும். இதற்கு காரணம் அதிகப்படியான தண்ணீர் பருகுவது. இதனால் சோடியத்தின் அளவு குறைந்து செல்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
மேலும் அதிகப்படியான நீர் பருகும் போது கைகள், உதடுகள் மற்றும் கால்களில் நிறமாற்றம், வீக்கம் ஏற்படக் கூட வாய்ப்புள்ளது. இதனை தொடர்ந்து சிறுநீரகங்கள் அதிகப்படியான நீரை வெளியேற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும், அதன் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும்.
அதிகப்படியான தண்ணீர் பருகும் போது உடலில் எக்ஸ்ட்ரோலைட்டுகள் வீழ்ச்சியடையும். இதன் காரணமாக தசைப்பிடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதனால் தேவைக்கேற்ப மட்டும் தண்ணீர் பருகுவது உடலுக்கு நல்லது.