#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆரோக்கியம்: வாழைப்பூவை வாரம் இருமுறை சாப்பிட்டு பாருங்க ரத்த சோகை காணாமல் போயிடும்.....!
வாழைப்பூவில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் இதை உணவில் சேர்க்கும் போது ரத்த சோகையை சரிசெய்யும்.
பெண்கள் வாழைப்பூ தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறு, வெள்ளைப்படுதல், வயிற்று வலி போன்ற அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும். வாழைபூவை தினமும் சாப்பிட்டு வர இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து இரத்தத்தை சுத்திகரிக்கும்.
இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்றவை வராமல் தடுக்கும்.அற்புத மருத்துவக் குணங்களைக் கொண்ட வாழைப்பூ. வாழைப்பூவில், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ்இரும்பு சத்து, தாமிர சத்து முதலிய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்களும் உள்ளன.
பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள், மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். அஜீரணம் கோளாறுகள் சரியாகும்.