தங்க சுரங்கத்தில் பயங்கரம்; உணவு, தண்ணீர் இன்றி 100 பேர் பலி., 500 பேர் உயிர் ஊசல்.!



  in South Africa Gold Mine Death 

தென்னாபிரிக்க நாட்டில் உள்ள ஜோக்கன்ஸ்பர்க் நகரில், கைவிடப்பட்ட தங்கச்சுரங்கம் அதிகம் செயல்பட்டு வருகிறது. இவற்றை அதிகாரிகள் கண்டறிந்து கைவிடப்பட்ட சுரங்கத்தை பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்து வருகின்றனர். 

இதனிடையே, கைவிடப்பட்ட தங்க சுரங்கத்தில் தங்கத்தை தேடி சட்டவிரோத கும்பல் மீண்டும் சுரங்கத்தை செயல்படுத்தும் முனைப்புடன் இருக்கின்றன. 

இதனை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே, கைவிடப்பட்ட சுரங்கத்தில், அதிகாரிகளின் கைது நடவடிக்கைக்கு பயந்து தொழிலாளர்கள் நிலத்தடியில் தங்கியதாக தெரியவருகிறது. 

இதையும் படிங்க: பசு பலாத்கார முயற்சி.. உதை வாங்கியே உயிரைவிட்ட 43 வயது நபர்.. ஆணுறையால் அம்பலமான உண்மை.!

உணவு, தண்ணீர் இன்றி நடந்த சோகம்

அப்போது, அதிகாரிகள் கயிறு பாதையினை அகற்றியதாக தெரியவரும் நிலையில், சுரங்கத்தில் இருந்து வெளியேற இயலாமல் பலரும் தவித்துள்ளனர். 

இதனால் 100 க்கும் மேற்பட்டோர் உள்ளேயே சிக்கி உயிரிழந்துவிட்ட நிலையில், 500 பேர் நிலத்துக்கடியில் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர்களின் நிலை தெரியவில்லை.

இதையும் படிங்க: காதலியை இம்ப்ரஸ் செய்ய முயற்சி; சிங்கங்களுக்கு இரையான ஊழியர்.. இறுதிநிமிட வீடியோ.!