மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அனைவருக்கும் பிடித்த... சுவையான தித்திப்பான கமர்கட்.... சுலபமாக செய்வது எப்படி...?
அனைத்து வயதினருக்கும் மிகவும் பிடித்த கமர்கட் சுவையாக செய்வது எப்படி பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல்- 2 கப்
வெல்லம்-1/2 கப்
ஏலக்காய் - 4
நெய் - தேவையான அளவு
செய்முறை:
துருவிய தேங்காய் இரண்டு கப் அளவு எடுத்து வாணலியில் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் வெல்லத்தையும் அடுப்பில் வைத்து தண்ணீர் சேர்த்து மிதமாக சூடு செய்து, வடிகட்டி மீண்டும் வெல்ல கரைசலை கம்பி பதம் வரும் வரை அடுப்பில் வைத்து காய்ச்சவும்.
பின்னர் வதக்கி வைத்த தேங்காய் துருவலை வெல்லப்பாகில் சேர்த்து கைவிடாமல் கிளறவும். வெல்லமும் தேங்காயும் திரண்டு வந்தவுடன் அடுப்பை விட்டு இறக்கவும்.
அதன் பின்னர் மிதமான சூட்டில் இருக்கும் போது கையில் கொஞ்சம் நெய் தடவி சிறிது சிறிதாக உருட்டி எடுக்க வேண்டும்.
சுவையான தித்திக்கும் கமர்கட் ரெடி.