காலாவதியான பொருட்களை கவனிக்காமல் சாப்பிட்டால் என்ன நடக்கும்?:  கடைகளில் வாங்கும் பொருட்களில் கவனம்.!



Expiry Date End Items May Cause Problems 

 

தினமும் நாம் சாப்பிடும் உணவுப்பொருள்களுக்கு காலாவதி நேரம் என்பது இருக்கிறது. வீட்டில் சமைக்கப்படும் பொருளாக இருந்தாலும் சரி, கடைகளில் வாங்கப்படுபவையாக இருந்தாலும் அதற்காக இருக்கும் காலாவதி நேரம் தீர்ந்துவிடும் பட்சத்தில் அது சாப்பிட தகுதி இல்லாதது.

இதனை கட்டாயப்படுத்தியோ அல்லது பிற காரணங்களுக்காகவோ சாப்பிடும் பட்சத்தில் கட்டாயம் அது சார்ந்த விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும். அந்த வகையில் காலாவதியான பொருட்களை சாப்பிடுவதால் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவையும் ஏற்படும். 

health tips

சில நேரம் இது உயிரிழப்புக்கும் வழிவகை செய்யும். காலாவதியான பொருட்களில் உருவாகும் பாக்டீரியா மற்றும் வைரஸ், பூஞ்சை போன்றவை நமது உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி மேற்கூறிய பிரச்சனைகளை ஏற்ப டுத்துகிறது. இதனால் காலாவதி தேதியை நாம் கவனிக்க வேண்டியது முக்கியமாகும்.