திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கர்ப்பிணி பெண்கள் கவனம்... இதை சாப்பிட்டால் கருச்சிதைவு ஆபத்து.. உஷார்.!
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அதிகளவு எடையுள்ள பொருட்களை தூக்க கூடாது. இதனால் கருச்சிதைவு ஏற்பட்டு, கர்ப்பப்பை கீழே இறங்கும் அபாயம் உள்ளது. இதனை பெண்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரம்பகாலத்தில் ஏற்படும் கருச்சிதைவை தடுக்க அத்திப்பழம், தேன் மற்றும் உப்பு சேர்த்து சாப்பிடலாம்.
ஆப்பிள் பழம், தேன், குங்குமப்பூ, ரோஜா இதழ் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து மாதம் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்த்திட வேண்டும். தினமும் கட்டாயம் நடைப்பயிற்சி, நல்ல இசை கேட்பது, ஊட்டச்சத்து உணவுகள் சாப்பிட வேண்டும்.
எள் உருண்டை, அன்னாசிப்பழம், பப்பாளிப்பழம், வெல்லம், கருஞ்சீரகம் உணவுகளை தவிர்க்கலாம். அதிகளவு வெப்பம் கொண்ட பொருட்களால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால், அதனை தவிர்ப்பது நல்லது. மருத்துவரை ஆலோசிப்பதும் நல்லது.
கர்ப்ப காலத்தில் வாந்தி ஏற்படுவதை குறைக்க இலவங்க பொடியை நீரில் கலந்து அரைமணிநேரம் ஊறவைத்து குடிக்கலாம். தினமும் பெண்கள் நெல்லிக்காய் குடிக்க வேண்டும். பேரிச்சம்பழம் சாப்பிட்டால் தாய்ப்பால் சுரக்கும். அதனைப்போல, முருங்கை, முள்ளங்கி போன்றவை சாப்பிட்டால் கைகால் வெக்கம் கட்டுப்படும். மாம்பழம் சாப்பிட்டால் பிறகும் குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும்.