Good Bad Ugly: அஜித் குமாரின் குட் பேட் அக்லீ படம்; ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
அச்சச்சோ.. உங்களை தேனீ கொட்டிருச்சா?.. முதலுதவியாக என்ன செய்ய வேண்டும்?..!
தேனீக்கள் கொட்டினால் கடமையான பாதிப்பு ஏற்படும். பாதிக்கப்பட்ட இடத்தில் அரிப்பு, வீக்கம், வலி, சருமத்தின் நிறம் மாறுவது, நாக்கு மற்றும் தொண்டை அலர்ஜி, வாந்தி போன்றவை ஏற்படும். சிலருக்கு தலைசுற்றுவது, சுவாச சிரமம், இதய துடிப்பு அதிகரித்தல், வயிற்றுப்போக்கு போன்றவையும் ஏற்படலாம். இதனை தேனீ கொட்டியவரை தகுந்தவாறு கவனிப்பது அவசியம்.
தேனீ ஒரேவேளை நம்மை தீண்டிவிட்டால், அது கொட்டிய இடத்தில் சோப்பு நீர் விட்டு தடவி மசாஜ் செய்து கழுவ வேண்டும். பின்னர், காட்டன் துணியை கொண்டு துடைத்து, ஐஸ்கட்டியால் ஒத்தடம் கொடுக்க தேனீ கடித்ததால் ஏற்படும் ஒவ்வாமை பிரச்சனை சரியாகும்.
வீக்கம் மற்றும் உடலுக்குள் விஷம் செல்லும் பிரச்சனை தடைபடும். தேனீயின் விஷம் உடலுக்குள் செல்லாமல் இருக்க பேக்கிங் சோடா உதவி செய்கிறது. சிறிதளவு தண்ணீரில் பேக்கிங் சோடாவை சேர்த்து தேனீ தீண்டிய இடத்தில் பூச வேண்டும். இதனால் தேனீ விஷத்தின் வீரியம் கூரையும். இதனைப்போல ஆப்பிள் வினிகர், பற்பசை போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.
பற்பசையில் உள்ள காரத்தன்மை தேனீ விஷத்தில் உள்ள அமிலத்தன்மையை குறைக்கும். பெரும்பாலானோருக்கு தேனீ கொட்டினால் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை என்றாலும், சிலருக்கு பிரச்சனை தரலாம். தேனீ கடித்த பின்னர் நிவாரணம் இல்லை என்ற பட்சத்தில் தேனை தடவலாம். அதுவே சிறந்த மருந்தாக செயல்படும்.