ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
22 வயதில் இளம் ரௌடி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய நபர்கள் யார்? ஆவடியில் பரபரப்பு சம்பவம்.!
சென்னையில் உள்ள ஆவடி, கன்னியம்மன் நகர் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ் (வயது 22). இவர் சி பிரிவு ரௌடி ஆவார். பல காவல் நிலையங்களில் 14 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதனிடையே, மர்ம நபர்கள் சிலர் தினேஷை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து தப்பிச் சென்றனர்.
காவல்துறை விசாரணை
இந்த விஷயத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள், ஆவடி டேங்க் காவல் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடிக்க அழைத்துச் செல்லப்பட்டவர் கொலை
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடத்தப்பட்ட விசாரணையில், தினேஷின் நண்பரான தவளை என்ற குமார், தினேஷை மதுபானம் அருந்த அழைத்துச் சென்றுள்ளார். பின் அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் தினேஷை சரமாரியாக வெட்டியதில், அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது அம்பலமானது. இதன்பேரில் அதிகாரிகள் மர்ம நபர்களுக்கு வலைவீசியுள்ளனர்.
இதையும் படிங்க: வீட்டு வாசலில் இருந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; போதையில் துணிகரம்.!
இதையும் படிங்க: உல்லாசத்துக்குத்தான் நீ., குடும்பத்துக்கு அவ.. கள்ளக்காதலியை திருமணம் செய்ய மறுத்த நபர்.. பெண் குமுறல்.!