காலையில் வெறும் வயிற்றில் சூடான நீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?.. பைசா செலவில்லாமல் அசத்தல் உடல்நலம்.!
உழைப்பை நம்பியே இன்றைய நாட்கள் தொடர்ந்து கடந்த வருகிறது. ஒருநாள் உடல்நிலை சரில்லை என்று விடுமுறை எடுக்கலாம் என யோசித்தால், அன்றைய வருமானம் குறையுமே என எண்ணி உடலை வருத்தி நாம் பணியாற்றி வருகிறோம்.
இவ்வாறாக நமது உடலை தொடர்ந்து வற்புறுத்தி இயங்க வைப்பது அதனை மோசமான நிலைக்கு கொண்டு செல்லும். நமக்கு தேவையான உடல் ஆற்றலை பல வகைகளில் பெறலாம். இன்று வெறும் வயிற்றில் சூடான நீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம்.
காலை நாம் எழுந்ததும் வெதுவெதுப்புடன் உள்ள நீரை குடித்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நமது வயிற்றில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறும். உடல் எடையினை குறைக்க உதவி செய்யும். மலச்சிக்கல் பிரச்சனை என்பது எட்டிப்பார்க்காது. முகமானது பொலிவு பெறும். உடலின் நீர்சத்து அதிகரிக்கும். சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படும் அபாயம் தவிர்க்கப்படும்.