3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
கோபமா, மன அழுத்தமா.?! வெந்நீரே போதும்.. இது சூப்பர் மருந்தா இருக்கே.?!
தற்போதைய காலகட்டத்தில் உடல் எடை பிரச்சனையால் பல்வேறு மக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு காரணம் சரியான வாழ்க்கை முறையும், உடற்பயிற்சி இன்மையும் தான். எனவே சரியான வாழ்க்கை முறையை மேற்கொண்டால் உடல் எடை பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம். இந்த உடல் எடை பிரச்சனைக்கு அதிக அளவு காரணமாக இருப்பது கொழுப்பு தான். இந்த கொழுப்பை தடுக்க வேண்டும் என்றால் அன்றாடம் தண்ணீரை சூடேற்றி குடிக்க வேண்டும்.
இது கொழுப்பு செரிமானத்தை சீர்படுத்துகிறது. இதனால், உடலில் கொழுப்பு இல்லாமல் போகிறது. சூடான நீரை குடிப்பதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றது. சைனஸ் பிரச்சினை இருப்பவர்கள் அன்றாடம் ஒரு கப் வெந்நீர் அருந்தினால், இது மூக்கில் உள்ள அடைப்பை நீக்குகிறது. எனவே மூக்கில் இருந்து ரத்தம் வழிவது குறையும்.
இது குடல் இயக்கத்திற்கு உதவுவதால் கேஸ் உள்ளிட்ட பிரச்சனைகளையும் நீக்குகிறது. மலச்சிக்கல் இருப்பவர்கள் சுடுதண்ணீர் குடிக்கும் போது அவர்களது பிரச்சனை நீங்கும் குடல் இயக்கத்தை சீராக்குவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
மேலும் மன அழுத்தம், கோபம், அழுகை, உள்ளிட்டவை இருக்கும் போது வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் மத்திய நரம்பு மண்டலத்தை இது சீராக்கி அதன் பாதிப்பிலிருந்து நம்மை காக்கிறது.