#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கர்ப்பகாலத்தில் ஏற்படும் முதுகு வலி.. காரணமும், தீர்வும் இதோ..!
கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பு மற்றும் Relaxin ஹார்மோன் சுரப்பால் முதுகு வலி ஏற்படுகிறது. இதனை தவிர்க்க கீழ்காணும் வழிமுறையை மேற்கொள்ளலாம்.
கர்ப்பிணி பெண்களுக்கு தலைவலி, முதுகுவலி மற்றும் இடுப்புவலி போன்ற பல்வேறு வலிகள் ஏற்படுவது கர்ப்பகாலத்தில் இயற்கையான ஒன்று. கர்ப்பகாலத்தில் 11.3 கிலோ எடை முதல் 15.8 எடை வரை கர்ப்பிணி பெண்களின் உடல் எடை அதிகரிக்கும். இதனால் முதுகில் அழுத்தம் ஏற்படும். கருவினால் கர்ப்பப்பை பெரிதாகி முதுகு மற்றும் இடுப்பு இரத்தக்குழாய் நரம்புகளை அழுத்துவதால் வலி ஏற்படும்.
கர்ப்பகாலத்தின் போது சுரக்கும் Relaxin என்ற ஹார்மோன் சுரப்பதால் முதுகு இடுப்பு தசைகள் மற்றும் ஜவ்வுகள் வலுவிழந்து வலி ஏற்படுகிறது. வயிறும் பெரிதாக மாறிக்கொண்டே வரும் போது, முதுகின் எலும்பு முன்னோக்கி வளைகிறது. அதிக அழுத்தம் காரணமாகவும் வலி ஏற்படுகிறது.
முதுகுவலியை தவிர்க்கும் வழிமுறைகள் :
கர்ப்பிணி பெண்கள் பின்னோக்கி சாய்ந்து நிற்பது வசதியாக இருக்கும் என்றாலும் அப்படி நிற்க கூடாது. நேராக நிமிர்ந்து, கால்களை அகற்றி நிற்பது சரியான செயல் ஆகும்.
உட்காரும் நேரங்களில் முதுகுக்கு சப்போர்ட் ஏதேனும் வைத்து உட்காரலாம். உட்காரும் சமயத்தில் டவலை நான்காக மடித்து, முதுகுக்கு பின்னர் வைத்து உட்காருவதால், முதுகு பகுதியில் ஏற்படும் அழுத்தம் குறையும்.
தரைகளில் இருந்து பொருட்களை தூக்கும் போதோ அல்லது எடுக்கும்போதோ, முன்பக்கம் குனிந்து எடுப்பதை தவிர்க்க வேண்டும். முதுகை நேராக வைத்து முழங்காலை மடக்கி அந்த பொருளை தூக்கலாம்.
பளுவாக இருக்கும் பொருட்களை எடுக்கும் போது, உடலோடு அணைத்தவாறு பிடித்து தூக்க வேண்டும். கூன் போடுவது போல வளைந்து உட்காருவதை தவிர்க்க வேண்டும். மசாஜ் செய்து முதுகு வலியை குறைக்கலாம்.
கர்ப்ப காலங்களின் இறுதி மாதத்தில் போதுமான அளவு ஓய்வு எடுக்கிறோமா? என்பதை உறுதி செய்ய வேண்டும். பிரசவத்திற்கு பின்னரும் ஓய்வு என்று இருக்காமல், அவ்வப்போது நடப்பது சாலச்சிறந்தது.
மேலும், உடலுக்கும், உடல் எலும்புக்கும் சத்துக்களை வழங்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் இறைச்சி போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப எடுத்துக்கொள்வது நல்லது.